விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் காமன்மேன் என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றால், நேரடியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் 100 நாள்கள் போட்டியில் பங்கேற்கலாம்.
விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி 9 சீசன்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சியின் ஒவ்வொரு நாள் போட்டியையும், ஒவ்வொரு போட்டியாளரையும் பார்வையாளர்கள் நன்கு கவனிப்பதால், போட்டி குறித்த புரிதல் பொதுமக்களில் பலருக்கு ஏற்பட்டிருக்கும்.
போட்டியை நன்கு புரிந்துகொண்ட பொதுமக்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக, பிக் பாஸ் காமன்மேன் என்ற புதிய நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் vijay.jiostar.com என்ற தளத்தில் உங்களில் சுய விவரங்களையும், ஏன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்ற விருப்பத்தையும் 2 நிமிட விடியோவாகப் பதிவு செய்ய வேண்டும்.
இதில் தகுதியானவர்கள் நிகழ்ச்சிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியை வெளியில் இருந்து பார்த்தவர்கள், இனிமேல் விளையாடலாம் என நடிகரும் இந்த நிகழ்ச்சித் தொகுப்பாளருமான விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முன்னோட்ட விடியோ வெளியாகி பலரின் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Summary
Bigg Boss The Common Man new program in vijay tv
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











