/

அய்யனார் துணை தொடருக்கும் பெருகும் ஆதரவு! இந்த வார டிஆர்பி!

இந்த வார டிஆர்பி விவரம் தொடர்பாக....

News image
அய்யனார் துணை - படம் - இன்ஸ்டாகிராம்
Updated On :13 பிப்ரவரி 2026, 10:58 am

இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை தொடர், ரசிகர்களின் ஆதரவால் டிஆர்பியில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.

சின்ன திரையில் ஒளிபரப்பாகும் எந்தெந்த தொடர்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது என்பதை டிஆர்பியின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

அந்தவகையில், சின்ன திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களின் டிஆர்பி விவரம் வெளியாகியுள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே மற்றும் மூன்று முடிச்சு தொடர்களின் சங்கமாக ஒளிபரப்பாகும் தொடர் 10.25 டிஆர்பி புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

கயல் தொடர் 8.54 டிஆர்பி புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர்கிறது மற்றும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை தொடர்கள் 8.03 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளன.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் தொடர் 7.98 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று நான்காம் இடத்தில் உள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை தொடர் 7.70 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளது.

அன்னம், பாண்டியன் ஸ்டோர்ஸ், சின்ன மருமகள் உள்ளிட்ட தொடர்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.