/

விளம்பர இடைவேளையின்றி ஒளிபரப்பாகும் அய்யனார் துணை!

அய்யனார் துணை தொடர் விளம்பர இடைவேளையின்றி இன்று (பிப். 9) ஒளிபரப்பாகவுள்ளது.

News image
அய்யனார் துணை - படம் - இன்ஸ்டாகிராம்
Updated On :9 பிப்ரவரி 2026, 10:55 am

இணையதளச் செய்திப் பிரிவு

அய்யனார் துணை தொடர் விளம்பர இடைவேளையின்றி இன்று (பிப். 9) ஒளிபரப்பாகவுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு அய்யனார் துணை தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் எதிர்நீச்சல் தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகை மதுமிதா நாயகியாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அரவிந்த் சேஜு நடித்து வருகிறார்.

இவர்களுடன் அரவிந்தின் சகோதரர்களாக முன்னா, பர்வேஷ், அருண் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நடிகர் ரோசரி, இவர்களுக்குத் தந்தையாக நடிக்கிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் அதிக டிஆர்பி புள்ளிகளைப் பெற்றுள்ள இந்தத் தொடர், மக்கள் மனம் கவர்ந்த தொடராகவும் உள்ளது.

இயக்குநர் ராம்குமார் தாஸ் இயக்கிவரும் இத்தொடரில் கதாபாத்திரங்களின் பெயர்கள் அனைத்தும் சேரன், சோழன், பாண்டியன், பல்லவன், வானதி என இதிகாச கதாபாத்திரங்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது இத்தொடரின் சிறப்பம்சமாகும்.

அய்யனார் துணை

அய்யனார் துணை

பல்வேறு திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிவரும் அய்யனார் துணை தொடர் இன்று (பிப். 9) விளம்பர இடைவேளையின்றி ஒளிபரப்பாகவுள்ளது.

பிடிக்காத திருமணத்தில் இருந்து தப்பிக்க நான்கு சகோதரர்கள் உள்ள வீட்டின் மூத்த மகனை போலியாக திருமணம் செய்துகொண்டு அந்த வீட்டில் நாயகி சந்திக்கும் சவால்களை மையமாக வைத்து இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.