நடிகை தர்ஷனா ஸ்ரீபால் புதிய தொடரில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
நீ இன்றி நானில்லை எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
ஒரு பெண்ணின் பல்வேறுகாலகட்ட உணர்வுப் பயணத்தை வெளிப்படுத்தும் வகையில் தொடரின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இத்தகைய கதையம்சம் உடைய தொடரில், அழுத்தமான நடிப்பை வழங்கக் கூடிய தர்ஷனா நடிப்பதால், கதைக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அமையும் என ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
ஏற்கெனவே விஜய் தொலைக்காட்சியில் தமிழும் சரஸ்வதியும், சன் தொலைக்காட்சியில் சித்தி -2, பூவா தலையா உள்ளிட்டத் தொடர்களில் தர்ஷனா நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் தர்ஷனா ஸ்ரீபால் - படங்கள் - இன்ஸ்டாகிராம்
நீ இன்றி நானில்லை தொடரில் நடிகை தர்ஷனா நாயகியாக நடிக்கிறார் என்றதுமே, இத்தொடரின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தொடரில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

சமூக வலைதளங்களில் தர்ஷனா ஸ்ரீபால் - படங்கள் - இன்ஸ்டாகிராம்
எனினும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதால், பலதரப்பட்ட ரசிகர்களைச் சென்றுசேரும் வகையில், இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பார்வையாளர்களுக்கு தொய்வு ஏற்படுத்தாத வகையில் அரங்குகள் அமைத்தும், வெளிப்புற தளங்களிலும் படப்பிடிப்பு நடத்தப்படவுள்ளது. இத்தொடர் ஒளிபரப்பாகும் நேரம் மற்றும் சக நடிகர்கள் குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Serial Actress Dharshna in New serial Nee Indra Naanillai in vijay tv
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தெலுங்கு தொடரில் நாயகியாகும் தமிழ் சீரியல் நடிகை!

பாரிஜாதம் தொடரில் இணையும் ஆடுகளம் நடிகர்!

கெளரி தொடரில் ரோஜா தொடர் நடிகை!

மீண்டும் மகாபாரதம்! நாள்தோறும் காலை ஒருமணி நேரம் ஒளிபரப்பாகிறது!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



