டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஒரு வாரம் நடந்ததை ஒரு நாளில் பார்க்க... அய்யனார் துணை தொடரின் புதிய முயற்சி!

அய்யனார் துணை தொடரின் புதிய முயற்சி குறித்து...

News image
அய்யனார் துணை தொடர்- படம் - எக்ஸ்
Updated On :5 பிப்ரவரி 2026, 5:20 am

இணையதளச் செய்திப் பிரிவு

அய்யானார் துணை தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒரு வாரம் நடந்தவற்றை ஒரு நாளில் பார்க்கும் விதமாக புதிய முயற்சியை தொடர் குழு மேற்கொண்டுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் கடந்தாண்டு ஜனவரி முதல் அய்யனார் துணை என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்தத் தொடரில், எதிர்நீச்சல் பிரபலம் மதுமிதா நாயகியாக நடிக்கிறார்.

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடர் டிஆர்பி புள்ளிகள் அதிகம் பெற்று முன்னணி தொடராக இருந்து வருகிறது. மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்தத் தொடரில் மதுமிதா, அரவிந்த் சேஜு ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும்அரவிந்தின் சகோதரர்களாக முன்னா, பர்வேஷ், அருண் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நடிகர் ரோசரி, இவர்களுக்குத் தந்தையாக நடிக்கிறார்.

நான்கு சகோதர்கள் உள்ள தாய் இல்லாத வீட்டில் மூத்த மருமகளாக வரும் நாயகி (மதுமிதா), கூட்டு குடும்பத்தில் எதிர்கொள்ளும் சவால்களே இத்தொடரின் கதையாக உள்ளது.

இந்த நிலையில், இந்த வாரம் நடந்த ஒரு வாரக் கதையை, ஒரு நாளில் பார்க்கும் விதமாக வரும் பிப். 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை தொடர்ந்து 1.30 மணி நேரம் அய்யனார் துணை தொடர் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

இதற்கு ரசிகர்களும் சமூக ஊடகங்களில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

summary

The Ayyanar Thunai series team has undertaken a new initiative to present the events that occurred from Monday to Friday in a single episode.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.