திருமண பந்தத்தில் இணைந்த சின்ன திரை பிரபலம்!
லட்சுமி தொடர் நடிகை கீர்த்தி விஜய் திருமணம் குறித்து..


லட்சுமி தொடரில் நடித்து பிரபலமான நடிகை கீர்த்தி விஜய்க்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது.
சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் லட்சுமி.
ஸ்ருதி மற்றும் எஸ்எஸ்ஆர் ஆர்யன் ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்கும் தொடர் லட்சுமி. மேலும், இந்தத் தொடரில் ரிந்தியா, நேஹா மேனன், நித்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
நடிகை கீர்த்தி விஜய் லட்சுமி தொடரில் கோகிலா என்ற பாத்திரத்தில் நடித்து வருகிறார். முன்னதாக, இவர் மிஸ்டர் மனைவி தொடரில் கவிமலர் பாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

கீர்த்தி விஜய் - சாய் கிரிஷ்
இந்த நிலையில், நடிகை கீர்த்தி விஜய்க்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் பின்புலத்தில் வேலைபார்க்கும் பிரபலமான சாய் கிரிஷ் என்பவருக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது.
கீர்த்தி விஜய் - சாய் கிரிஷ் ஜோடிக்கு சின்ன திரை பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...