டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சிறந்த பிறந்தநாள் பரிசு! கருவுற்றிருப்பதை அறிவித்த சின்ன திரை நடிகை!

இலக்கியா தொடர் நடிகை சுஷ்மா நாயர், தான் கருவுற்றிருப்பதை அறிவித்துள்ளது குறித்து..

News image
கணவருடன் நடிகை சுஷ்மா நாயர் - படம் - இன்ஸ்டாகிராம்
Updated On :10 பிப்ரவரி 2026, 10:14 am

இணையதளச் செய்திப் பிரிவு

இலக்கியா தொடரில் நடித்து கவனம் ஈர்த்த நடிகை சுஷ்மா நாயர், தான் கருவுற்றிருப்பதை அறிவித்துள்ளார்.

பிறந்தநாளில் கிடைத்த மிகச்சிறந்த பரிசு இது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2 மணிக்கு இலக்கியா தொடர் ஒளிபரப்பானது. சாம்பவி குருமூர்த்தி, நந்தா லோகநாதன், காயத்ரி சாஸ்திரி என பலர் நட்சத்திர பட்டாளம் நடித்த இந்தத் தொடர் 985 எபிஸோடுகளுடன் முடிந்தது.

2022 முதல் ஒளிபரப்பாகிவரும் இத்தொடரில் வில்லி பாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றவர் நடிகை சுஷ்மா நாயர். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும், பட்ஜெட் குடும்பம் என பல தொடர்களில் நடித்துள்ளார்.

சின்ன திரையில் நடித்துவந்தாலும் சுயமாக ஆடைவடிவமைப்புத் தொழிலும் ஈடுபட்டு வரும் இவர், லிஜோ ஜான் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். தற்போது லிஜோ ஜான் - சுஷ்மா நாயர் தம்பதி கருவுற்றிருப்பதை அறிவித்துள்ளனர்.

கணவருடன் நடிகை சுஷ்மா நாயர்

கணவருடன் நடிகை சுஷ்மா நாயர்

பிறந்தநாளில் கிடைத்த மிகச்சிறந்த பரிசு, கருவுற்றிருப்பதை அறிந்துகொண்டது என்று நெகிழ்ச்சியுடன் சுஷ்மா பகிர்ந்துள்ளார். இவருக்கு சின்ன திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.