பிரேமலு படத்தின் இரண்டாம் பாகம் கைவிடப்பட்டதாக இயக்குநர் திலீஷ் போத்தன் கூறியுள்ளார்.
இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்கத்தில் நடிகர்கள் நஸ்லன், மமிதா பைஜு நடிப்பில் நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக உருவான பிரேமலு ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மிகப்பெரிய வெற்றிப்படமானது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, பிரேமலுவின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளதாக அறிவிப்பும் வெளியானது.
இயக்குநர் கிரிஷ் ஏடி உள்பட அதே படக்குழுவினர் இணைவார்கள் எனக் கூறப்பட்டது. ஆனால், இதற்கான பணிகள் துவங்காமல் இருந்தன.
பிரேமலு படத்தைத் தொடர்ந்து நஸ்லன் ஆலப்புழா ஜிம்கானா படத்தில் நடித்தார். அப்படம் வெற்றிப்படமாகவே அமைந்தது. மமிதா பைஜூவும் தமிழில் முக்கியமான நாயகியாக வளர்ந்துள்ளார்.
இந்த நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குநர், நடிகர் திலீஷ் போத்தன், ”பிரேமலு - 2 திரைப்படத்திற்கு வாய்ப்பே இல்லை. அதற்கு பதில், பத்தேலம் குடும்ப யூனிட் வெளியாகும்” எனக் கூறியுள்ளார். இதனால், பிரேமலு - 2 கைவிடப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
Director Dileesh Pothan has stated that the second part of the film Premalu - 2 has been dropped.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கர படத்தினை நிராகரித்த பிருத்விராஜ்..! கதையில் மாற்றம் செய்த இயக்குநர்!
சிவராஜ்குமாரின் தமிழ்ப்படம் அறிவிப்பு!

சுபம்... 707 நாள்களில் நிறைவடைந்த சக்திவேல் தொடர்!

விரைவில் நிறைவடைகிறது சக்திவேல் - 2 தொடர்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


