நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

வேட்டையன் படத்தின் கதை முற்றிலும் மாறுபட்ட ஒன்று என நடிகர் ராணா டக்குபதி புகழ்ந்துள்ளார்.

News image
Updated On :5 மே 2024, 6:29 am

DIN

இயக்குநர் த.செ. ஞானவேல் ஜெய்பீம் படத்தின் மூலம் பெரிய கவனம் பெற்றார். தற்போது, நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து வேட்டையன் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.

இதில், நடிகர்கள் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டக்குபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. தற்போது, மும்பையில் நடிகர்கள் ரஜினி, அமிதாப் பச்சனுக்கான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. 100 நாள்களைக் கடந்து படப்பிடிப்பு நடந்து கொண்டிருப்பதால் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், நடிகர் ராணா டக்குபதி, “ரஜினி சாரின் பிற படங்களை ஒப்பிடும்போது வேட்டையன் கதை முற்றிலும் வித்தியாசமானது. அவர், இந்த மாதிரியான கதையில் நடிப்பது ஆச்சரியத்தைத் தருகிறது. இப்படம், நீதித்துறை, காவல்துறை மற்றும் தொழில்முனைவோர் அமைப்பைப் பற்றி பேசுகிறது. கதைக்காக பெரிய ஆய்வு செய்திருக்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.