ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

டாக்ஸிக் டீசர் வெளியானது!

டாக்ஸிக் டீசர் வெளியிடப்பட்டிருப்பது பற்றி...

News image
டாக்ஸிக் டீசர்
Updated On :20 பிப்ரவரி 2026, 4:55 am

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் யஷ் நடித்துள்ள டாக்ஸிக் படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஏற்கெனவே, இந்தப் படத்தின் ராயா கதாபாத்திரம் அறிமுக விடியோ யூடியூபில் இதுவரை 10 கோடி (100 மில்லியன்) பார்வைகளைக் கடந்துள்ளது.

பிற சமூக வலைதளங்கள் உள்பட ஒட்டுமொத்தமாக 20 கோடி (200 மில்லியன்) பார்வைகளைப் பெற்று ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிகர்கள் யஷ், ருக்மணி வசந்த், நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் டாக்ஸிக் திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்தப் படம் மார்ச் 19ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டீசர் வெள்ளிக்கிழமை காலை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் படம் வெளியாகவுள்ளது.

YouTube video thumbnail

இந்தப் படத்தை கேவிஎன் புரடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. நடிகர் விஜய்யின் ஜன நாயகன் படத்தினையும் இவர்கள்தான் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.