நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

லியோ திரைப்படம் 25-வது நாள் சாதனை போஸ்டர் வெளியிட்ட படக்குழு!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தின் 25-வது நாள் சாதனை போஸ்டரை வெளியிட்டது செவன் ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோ நிறுவனம்.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:20 am

DIN

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தின் 25-வது நாள் சாதனை போஸ்டரை வெளியிட்டது செவன் ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோ நிறுவனம்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து அக்டோபர் 19-ஆம் தேதி வெளியான திரைப்படம் லியோ. இந்தப் படத்தில் அர்ஜூன், சஞ்சய் தத், திரிஷா, கௌதம் வாசுதேவ், மிஷ்கின், பிரியா ஆனந்த், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருந்தனர்.

செவன் ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோ தயாரிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல்ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

படம் வெளியான முதல்நாளிலேயே ரூ.148 கோடி வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து உலக அளவில் ரூ.540 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது லியோ திரைப்படத்தின் 25-வது நாள் சாதனை போஸ்டரை வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.