நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

விஜய் ஆண்டனியின் கொலை படத்தின் முக்கிய அப்டேட்!

விஜய் ஆண்டனியின் கொலை படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 7:12 pm

DIN

விஜய் ஆண்டனியின் கொலை படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் 2016-ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழ், தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனி இயக்கி நடித்தார்.

பிச்சைக்காரன் திரைப்படம் மே 19-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமரிசனங்களைப் பெற்றது.

இதைத்தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் பாலாஜி குமார் இயக்கத்தில் உருவாகிருக்கும் திரைப்படம் 'கொலை'. இப்படத்தில் ரித்திகா சிங், மீனாட்சி செளவுத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை இன்பினிட்டி பிலிம் வெஞ்சர்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். 

இந்நிலையில், கொலை படத்தின் முக்கிய அறிவிப்பு வரும் 28 ஆம் தேதி காலை 10.05 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகார்வபூர்வமாக தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.