நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

அதிவேகமாக 1.2 கோடிப் பார்வைகளைக் கடந்த நா ரெடி பாடல்!

விஜய் பாடிய நா ரெடி பாடல் அதிவேகமாக 1.2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 7:11 pm

DIN

லியோ படத்தில் விஜய் பாடிய நா ரெடி பாடல் அதிவேகமாக 1.2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது.

விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் இணைந்துள்ளார். இதில் த்ரிஷா,  சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்துள்ளனர்.

மிஷ்கின், சஞ்சய் தத், கௌதம் மேனன்  ஆகியோர் காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக லோகேஷ் சமீபத்தில் கூறியிருந்தார். இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.  இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

லியோ படத்தின் முதல் பாடலான 'நா ரெடி'  பாடல் விஜய் குரலில் நேற்று வெளியானது. இப்பாடல் துள்ளள் பாடலாக வெளியானது. இதில் விஜய்யுடன் 100க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் நடனமாடி உள்ளனர்.

இந்நிலையில், இப்பாடல் கடந்த 16 மணி நேரத்தில் அதிவேகமாக 1.2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.