திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

சஞ்சீவ் - ஸ்ருதி ராஜின் புதிய தொடர்!

சஞ்சீவ்  மற்றும் ஸ்ருதி ராஜின் புதிய தொடர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:27 pm

DIN

சஞ்சீவ்  மற்றும் ஸ்ருதி ராஜின் புதிய தொடர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சஞ்சீவ்  வெங்கட் மற்றும் ஸ்ருதி ராஜ் இருவரும் தொலைகாட்சி மற்றும் சினிமா இரண்டிலும் நன்கு அறியப்பட்ட முகம்.

'திருமதி செல்வம்' தொடரில் செல்வம் என்ற கதாபாத்திரத்தில் நடித்தது ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் சஞ்சீவ்  வெங்கட்.

இவர் மெட்டி ஒலி, நம்பிக்கை, அண்ணாமலை, அவர்கள், ஆனந்தம், அகல்யா, மனைவி, வேப்பிலைக்காரி, மை டியர் பூதம், பெண், சித்தி 2 உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார்.

கிழக்கு வாசல் தொடரில் நடிக்கவிருந்த சஞ்சீவ், திடீரென அத்தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தற்போது வானத்தைப்போல தொடரில் காவல் துறை அதிகாரியாக நடித்து வருகிறார்.

அதேபோல் தென்றல் தொடரில் நடித்து ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியவர் ஸ்ருதி ராஜ். இவர் நடித்த ஆஃபிஸ் தொடர் மிகவும் பிரபலமடைந்தது.

தொடர்ந்து இவர்  நடித்த அழகு, அபூர்வ ராகங்கள், தாலாட்டு தொடர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில், சஞ்சீவ் மற்றும் ஸ்ருதி ராஜ் இணைந்து நடிக்கும் புதிய தொடர் சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. இத்தொடரில் திருமதி செல்வம் தொடரில் நடித்த ரிந்தியாவும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.