நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

சமந்தாவுக்கு நயன்தாரா அளித்த நினைவு பரிசு: 'டார்லிங் நயன்...'

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா இணைந்து நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்ததாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:50 am

DIN

'நானும் ரௌடி தான்' படத்துக்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்திருக்கும் படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. இந்தப் படத்தில் மற்றொரு நாயகியாக சமந்தாவும் நடித்துள்ளார். 

அனிருத் இசையில் இந்தப் படத்திலிருந்து டுடுடு, நான் பிழை பாடல்கள் மற்றும் பட டீசர் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்தப் படம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Story image

படப்பிடிப்பு நிறைவு 

இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் முடிவடைந்துள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டிக்கொண்டாடியுள்ளனர். நடிகை சமந்தாவுக்கு நயன்தாரா கேக் ஊட்டி விட அருகில் விக்னேஷ் சிவனும், விஜய் சேதுபதியும் கைதட்டி மகிழும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 

Story image

என்னுடைய தங்கமே 

இயக்குநர் விக்னேஷ் சிவனின் ''பதிவில், இதற்காக கடவுளுக்கு நன்றி. திறமையான நடிகர்களுடன் பணிபுரிய வேண்டும் என்பது ஒவ்வொரு இயக்குநரின் கனவு. என்னுடைய கதையை திரையில் கொண்டுவருவதற்கு இதனை விட சிறப்பான நடிகர்களைக் கேட்க முடியாது.

Story image

சிறந்த விஜய் சேதுபதி. எப்பொழுதும் அழகான, திறமையான நயன்தரா என்னுடைய தங்கமே. அழகான மிக சிறந்த நடிகையான சமந்தா. இந்தப் படம் சிறப்பாக உருவானதற்கு காரணமான இந்த அனைவராலும் நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்கிறேன். 

இந்தப் படத்தில் பணிபுரிந்த ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நீண்ட நாட்களுக்கு நிலைத்திருக்கும். நன்றி அழகான மக்களே'' என்று குறிப்பிட்டுள்ளார். 

Story image

சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. நீங்கள் வயிறு வலிக்க சிரிப்பதற்காக காத்திருக்கிறேன். படம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகிறது'' என்று குறிப்பிட்டுள்ளார். 

நயன்தாரா அளித்த பரிசு

Story image

மேலும் நயன்தாரா தனக்கு அளித்த கம்மல் பரிசுடன், அன்புள்ள கடிஜா, காதலுடன் கண்மனி என்ற குறிப்பையும் புகைப்படமாக பகிர்ந்து, நன்றி டார்லிங் நயன் என்று பகிர்ந்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.