நல்லகண்ணு உடல்நிலை! விஜய் விசாரிப்பு!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

'பீஸ்ட்' தெலுங்கு டிரெய்லர் வெளியானது

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் தெலுங்கு டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:53 am

DIN

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற 13 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இந்தப் படத்தின் தமிழ், ஹிந்தி டிரெய்லர்கள் ஏற்கனவே வெளியான நிலையில் இந்தப் படத்தின் தெலுங்கு டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. 

இந்த டிரெய்லர் தங்களை கவர்ந்துள்ளதாக தெலுங்கு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பீஸ்ட் படத்துடன் தெலுங்கில் வேறு எந்த படங்களும் வெளியாகாததால் பீஸ்ட் படத்துக்கு ஆந்திரா மற்றும் தெலங்கானா பகுதிகளில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பூஜா ஹெக்டே தெலுங்கில் பிரபலமான நாயகி என்பதும் குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக பீஸ்ட் ஹிந்தி டிரெய்லரை பகிர்ந்த வருண் தவான் தான் ஒரு பெரிய விஜய் ரசிகன் என்றார். அனிருத் இசையில் அரபிக் குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா பாடல்கள் இந்திய அளவில் டிரெண்டானது. ஹிந்தி நட்சத்திரங்கள் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி விடியோ பகிர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.