நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

மதுரையில் தடையில்லா குடிநீர் வழங்கப்படுவதாக பொய்யான தகவல்: முதல்வருக்கு செல்லூர் ராஜு கோரிக்கை

மதுரையின் பல பகுதிகளில் தண்ணீர் வழங்கப்படுவதில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றச்சாட்டு

News image
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
Updated On :25 பிப்ரவரி 2026, 8:25 am

இணையதளச் செய்திப் பிரிவு

முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்காகப் போடப்பட்ட குழாய்கள் தரமற்றதாக இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் செல்லூர் ராஜு பேசுகையில், "முதல்வர் இங்கு வந்திருந்தார். மதுரையில் உள்ள சாலைகள் குழிகளால் நிரம்பியுள்ளன.

முல்லைப் பெரியாறு ஒருங்கிணைந்த குடிநீர்த் திட்டத்தின்கீழ், மதுரை மாநகரில் 2,57,000 வீடுகளுக்கு தடையில்லா குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக பொய்யான மற்றும் தவறான தகவல் முதல்வருக்கு வழங்கியுள்ளனர்.

ஆனால், யதார்த்தமான உண்மை என்னவென்றால், மதுரையின் பல பகுதிகளில், குறிப்பாக 37 வார்டுகளில் தண்ணீர் வழங்கப்படுவதில்லை.

முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்காகப் போடப்பட்ட குழாய்கள் தரமற்றதாக இருக்கின்றன. அவற்றால் அழுத்தம் தாங்க முடியாமல், உடைந்து போகின்றன.

நீரோடைபோல தண்ணீர் வெளியே பாய்கிறது. இவையனைத்தும் ஆய்வு செய்யப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.

மேலும், சசிகலா புதிய கட்சி தொடங்கியது குறித்த கேள்விக்கு, தனக்கு அதனைப் பற்றி எதுவும் தெரியாது என்று செல்லூர் ராஜு மறுத்து விட்டார்.

summary

Water is not being supplied in many areas of Madurai, ADMK Former Minister Sellur Raju slams DMK Govt

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.