ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பதில்
ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பதிலளித்துள்ளார்.


ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து மதுரையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், முதலமைச்சர் மதுரைக்கு வருவது மகிழ்ச்சியான விஷயம்தான், மதுரைக்கு பல திட்டங்களை திறந்து வைப்பதற்காக வந்திருக்கிறார். நான் அன்போடு கேட்டுக் கொள்வது என்னவென்றால் முதலமைச்சர் கடந்த முறை வந்தபோது முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தை திறந்து வைத்தார். அந்தத் திட்டம் மக்களுக்கு சரிவர செயல்படுத்தப்படவில்லை. அதை முதல்வர் ஆய்வு செய்ய வேண்டும்.
அதிமுகவை விட்டு ஓபிஎஸ் சென்று விட்டார், சென்றவர்கள் என்ன பேசினாலும் அது எனக்கு கருத்து சொல்ல விரும்பவில்லை. மக்கள் பார்த்துகிட்டு இருக்கிறார்கள். அதிமுக தொண்டர்களும் பார்த்துகிட்டு இருக்கிறார்கள். அதிமுகவில் எடுக்கப்பட்ட நடவடிக்கை சரிதான் என மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சமீப காலமாக ஓபிஎஸ், திமுக விற்கு ஆதரவாக பேசி வருகிறார். சாதாரண டீக்கடை வைத்திருந்தவரை சேர்மன், சட்டப்பேரவை உறுப்பினர் , முதல்வர் என அழகு பார்த்தது அதிமுக கட்சிதான்.
இப்போது அதிமுக கட்சிக்கு குரல் கொடுக்காமல் இப்படி பேசுவதற்கு எனது எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல் எம்எல்ஏ ஐயப்பன் அவரா பேசுவது போல் தெரியவில்லை, அங்கு இருக்கிறவர்கள் சொல்லி பேசுகிறார். ஓபிஎஸ் இடம் தற்போது குறிப்பிட்ட ஒரு நான்கு, ஐந்து பேர் தான் இருக்கிறார்கள். அவர்களும் நம்மிடம் வந்து விடுவார்கள். தற்போது தான் அவரின் எண்ணம், பாதை அவர்களுக்கு தெரிந்து விட்டது. அதனால் அவரிடம் இருக்கும் நான்கு , ஐந்து நபர்களும் அதிமுகவுக்கு வந்துவிடுவர்.
அதிமுக கட்சி, திமுக எதிர்ப்பு என்பது எங்கள் ரத்தத்தில் ஓடுகிறது. இன்று இருக்கும் சூழ்நிலையில் இவர்கள் வகித்த பதவி அதிமுகவால் தரப்பட்டது. உண்மையான அதிமுக தொண்டன் இப்படி பேச மாட்டார். அதிமுக கட்சி இல்லை என்றால் எப்படி இவர்கள். சட்டப்பேரவை உறுப்பினர் ஆகியிருக்க முடியும். மக்களிடையே அடையாளம் காட்டி இருக்க முடியும். ஓபிஎஸ் யார் என்பது எப்படி தெரியும், அவரை இந்த அளவுக்கு தெரிய வைத்தது அதிமுக கட்சிதான். செங்கோட்டையனை வளர்த்தது அதிமுக.
பன்னீர்செல்வத்தை வளர்த்தது அதிமுக, எப்படி தற்போது இவர்கள் இப்படி பேசுகிறார்கள். செல்லூர் ராஜு யார் என்று, யாருக்கு என்னை எப்படி தெரியும், இந்த கட்சிதானே என்னை அறிமுகப்படுத்தியது. தற்போது எவ்வளவு தூரம் வளர்ந்து இருக்கிறேன் என்றால் அது அதிமுகவில் இருப்பதினால் தான். மூன்று முறை என்னை ஜெயிக்க வைத்தீர்கள் இரண்டு முறை அமைச்சராக இருந்தேன். அது அதிமுக கட்சியினால் தான் ஏற்பட்டது. என் உயிர் உள்ளவரை அதிமுகவில் தான் இருப்பேன் என கூறுவேன்.
என் தாயே தடுத்தாலும், ஆண்டவனே தடுத்தாலும் இயக்கத்தை இழிவாக பேசக்கூடிய யாராக இருந்தாலும் நான் இந்த நேரத்தில் சொல்கிறேன் அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன். என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...