மாஸ்டர் இசை வெளியீடு தேதி அறிவிப்பு
மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிகில் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய், மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். படத்தில் விஜய் உடன் நடிகர் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கைதி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
மாஸ்டர் படத்தை எக்ஸ் பி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியாகிறது. மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்ட நிலையில், தற்போது போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ஏற்கெனவே மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி லிரிக் வீடியோ வெளியாகி உலக முழுவதும் வைரலானது. இந்நிலையில் வரும் 15ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு மாஸ்டர் இசை வெளியீடு நடைபெறும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சன் தொலைக்காட்சி நேரலை செய்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...