/

எமி ஜாக்சனுக்கு என்ன நேர்ந்தது?

பிரபல மாடலாக இருந்து லண்டனிலிருந்து கோலிவுட்டில் நடிக்க வந்தவர் எமி ஜாக்சன்

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 10:03 am

சினேகா

பிரபல மாடலாக இருந்து லண்டனிலிருந்து கோலிவுட்டில் நடிக்க வந்தவர் எமி ஜாக்சன். மதராஸ பட்டினம், தாண்டவம், தங்க மகன், தெறி, ஐ போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனத்தை கொள்ளையடித்தவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து '2.O' படத்தில் நடித்திருக்கிறார். எமி ஜாக்சன் தற்போது கன்னட படம் ஒன்றிலும், இங்கிலாந்தின் பிரபல தொலைக்காட்சி சீரியலான `சூப்பர் கேர்ள்' என்ற சீரியலில் நடித்து வருகிறார். 

Story image

மறைந்த நடிகை ஸ்மிதா பட்டீலின் மகன் நடிகர் பிரதீக் பாபர் தான் எமியின் முன்னாள் காதலர். தற்போது பிரதீக் பாபருக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Story image

பாலிவுட் இயக்குநர் சானியா சாகரைத் திருமணம் செய்யவுள்ளதாக பாம்பே டைம்ஸ் பத்திரிகை பேட்டியில் கூறியுள்ளார் பிரதீக். மேலும் தனது இன்ஸ்டாகிராமிலும் தனது வருங்கால மனைவியுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து Holy snappp!.. that just happened! என்று பதிவிட்டுள்ளார்.

Story image

எமியும் பிரதீக்கும் கிட்டத்தட்ட ஓராண்டுகளுக்கு மேல் காதலித்தனர். ஒருவர் பெயரை மற்றவர்களின் கையில் பச்சை குத்திக் கொள்ளும் அளவிற்கு இருவரின் நெருக்கமும் பாலிவுட்டில் பிரபலமாக இருந்தனர்.

Story image

விரைவில் திருமணம் என்ற நிலையில் திடீரென்று இந்த ஜோடி பிரிந்தது. அதற்குக் காரணமாக பிரதீக்குடன் நேரம் செலவழிக்க இயலாத நிலையில் அவர் பிஸியாக இருந்துள்ளார். எமியுடனான பிரிவுக்குப் பிறகு பிரதீக் மனம் உடைந்த நிலையில் இருந்தார். ஒரு பத்திரிகை பேட்டியில் அந்தக் காலகட்டத்தை கடக்க மிகவும் கஷ்டப்பட்டதாகவும், போதை பழக்கத்துக்கு உள்ளாகி அதன் பின் தான் மீண்டதாகவும் மனம் திறந்து கூறினார்.

Story image

எமி தரப்பிலிருந்து இதற்கு பதிலாக நல்ல நண்பர்களாக இருக்கலாம் என்று முடிவு செய்திருந்தாலும் பிரிவுக்கு பின் பிரதீக்கை சந்திக்கவில்லை என்று கூறியிருந்தார்.

Story image

தற்போது பிரதீக்கின் திருமண செய்தி எமி ஜாக்ஸனுக்கு மன வருத்தம் அளித்தாலும் பழைய விஷயங்களிலிருந்து மீண்டு வருவது தான் புத்திசாலித்தனம் என்று கருதுகிறார். குடியரசு தின வாழ்த்துக்களை தனது டிவிட்டரில் பதிவிட்ட எமி அதனுடன் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.