நகைச்சுவை நடிப்பில் கோலிவுட்டை கலக்கி வருபவர் நடிகர் சூரி. சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக பங்கேற்று வருகிறார். தனது டிவிட்டர் பக்கத்தில் அடிக்கடி சுயமி படங்களையும் காமெடி பதிவுகளையும் எழுதி வருகிறார்.
தற்போது சூரி கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் தனது டிவிட்டரில், ‘இந்த வெள்ளந்தி சிரிப்பும் விளையாடுற தண்டட்டியும் தமிழ் மண்ணுக்கே உரிய அடையாளம். செல்ல அப்பத்தாக்களோடு ஒரு செல்பி…(கடைக்குட்டிசிங்கம் சூட்டிங் ஸ்பாட்)’ என்று ஒரு ட்வீட் செய்திருந்தார் சூரி.
அதற்கு பதிலாக நடிகர் சிவகார்த்திகேயன் ‘என்ணன்னே க்ளாஸ்மேட்ஸ் கூட கெட் டு கெதரா’ என்றும் 'அந்த வெள்ளந்திச்சிரிப்பு உனக்கு ரேபான் கூலர்ஸ் போட்டாதான் தெரியுமா!?' என்றும் கலாய்த்து கேள்விகள் கேட்க அதற்குச் சூரி, ‘யெஸ் யெஸ் ஆனா அவங்க என் டாடியோட க்ளாஸ்மேட்ஸ் பங்கு’ என்று சூரி பதில் போட்டுள்ளார். திரையில் மட்டுமல்லாமல், நேரிலும் இப்படி சோஷியல் மீடியாவிலும் தங்கள் நட்பை பேணி வருகிறார்கள் சூரி - சிவகார்த்திகேயன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் தொடரில் விளையாட கிரிக்கெட் ஆஸ்திரேலியா அனுமதி..! எப்போது வருவார்?

சென்னையில் 1 மணி வரை 54.58% வாக்குப்பதிவு!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 1 மணி நிலவரம்! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 41.11% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


