தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

'காலா' டப்பிங்கில் ரஜினி - வைரலாகும் புகைப்படங்கள்!

'கபாலி' படத்தின் வெற்றியினைத் தொடர்ந்து ரஜினி மற்றும் இயக்குநர் பா.ரஞ்சித் கூட்டணியில்

News image
Updated On :22 ஜனவரி 2018, 5:30 am

'கபாலி' படத்தின் வெற்றியினைத் தொடர்ந்து ரஜினி மற்றும் இயக்குநர் பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'காலா'. 'கரிகாலன்' என்ற தலைப்பின் சுருக்கமே 'காலா'.

 சென்னை மைலாப்பூரில் உள்ள knack studio-வில்  'இத்திரைப்படத்திற்கான தனது பகுதிகளுக்கான டப்பிங் பணிகளை நடிகர் ரஜினிகாந்த் தொடங்கினார்.

காலாவில் ரஜினியுடன் சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷின்டே, அருள் தாஸ், ஹூமா குரேஷி, திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரி ராவ், சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நடிகர் தனுஷ் தயாரிபில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இதன் முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. மும்பையின் தாரவி பகுதியில் வசிக்கும் தமிழ் மக்களின் உரிமைக்காக போராடும் டானாக ரஜினி நடித்துள்ளார். விரைவான ஷெட்யூலில் தினமும் கிட்டத்தட்ட 10-லிருந்து 15 மணி நேரம் வரை படப்பிடிப்பு நடைப்பெற்றது. பின்னர் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் பரபரப்பான நடைப்பெற்றது. தற்போது படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்த நிலையில் ரஜினிகாந்த், தான் நடித்த பகுதிகளுக்கான டப்பிங் பணிகளை தொடங்கினார்

ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பை பெற்றுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூப்பர் ஸ்டாருடன் தாங்கள் எடுத்துக் கொண்ட படங்களை ஸ்டூடியோ கலைஞர்கள் வெளியிட, அவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.