எம்.எஸ். பாஸ்கருக்கு ராயல் என்ஃபீல்டூ வகை புல்லட் வண்டி என்றால் ரொம்ப இஷ்டமாம். ஆனால் இதுவரை அவரிடம் என்ஃபீல்டு வண்டி இல்லை. வீட்டில் கார் வாங்கிய பிறகும் கூட என்ஃபீல்டு புல்லட் வாகனக் கனவு நிறைவேறாத ஏக்கமாகவே தொடர்ந்திருக்கிறது. சினிமாவில் பிஸியான பிறகு அதைப் பற்றி யோசிக்க நேரமிருந்திருக்காது. ஆனாலும், பாசமான மகளுக்குத் தெரியாதா தந்தையின் ஏக்கம். ஐஸூவும் தமிழ்த் திரையுலகில் தற்போது பிரபலமாக வளர்ந்து வரும் டப்பிங் ஆர்டிஸ்ட் என்பதால், தனது சொந்த வருமானத்தில் தந்தைக்குப் ஸ்பெஷலாக என்ஃபீல்டு வண்டி வாங்கிப் புத்தாண்டு சர்ப்பிரைஸ் கிஃப்ட்டாக அளித்து ஆச்சர்யப் படுத்தி நெகிழ வைத்து தானும் நெகிழ்ந்து நெக்குருகிப் போனார். அப்பா, மகளின் அன்பும், வாஞ்சையுமாக அந்த வீடியோ காண்போர் அனைவரையும் கவர்ந்திழுக்க புத்தாண்டு அன்று அப்பா, மகள் பாசத்தை உணர்த்தும் ஒரு இன்ஸ்பிரேஷனல் வீடியோவாக இணையத்தில் டிரெண்டிங் ஆகி விட்டது.