நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

காஞ்சனா - 3 இல் கதாநாயகியாகிறார் ஓவியா! 

நடிகர் ராகவேந்திரா லாரன்ஸின் புதிய படமான 'காஞ்சனா - 3' இல் ஓவியா கதாநாயகியாக நடிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 5:45 pm

DIN

சென்னை: நடிகர் ராகவேந்திரா லாரன்ஸின் புதிய படமான 'காஞ்சனா - 3' இல் ஓவியா கதாநாயகியாக நடிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் லாரன்ஸ் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் காஞ்சனா. நகைச்சுவை கலந்த பேய்ப் படமாக வெளிவந்த இதன் வெற்றி கொடுத்த நம்பிக்கையில் அதே வரிசையில் காஞ்சனா-2  படத்தினையும் லாரன்ஸ் எடுத்தார்.

தற்பொழுது இந்த வரிசையில் காஞ்சனா-3 க்கான கதை மற்றும் நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் 'காஞ்சனா - 3' இல் ஓவியா கதாநாயகியாக நடிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கிடைத்த பெரும் புகழுக்குப் பிறகு நடிகை ஓவியா ஒப்பந்தம் ஆகியிருக்கும் முதல் பெரிய படம் இது.

நடிகர் ராகவேந்திரா லாரன்சுடன் ஓவியா இருக்கும் படங்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெகுவாகப் பரவி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.