டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!

'ஜுராஸிக் வேர்ல்டு : ஃபாலன் கிங்டம்' படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் யூ-டியூபில் வெளியிடப்பட்டது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:19 pm

உமாகல்யாணி

'ஜுராஸிக் வேர்ல்டு : ஃபாலன் கிங்டம்' (Jurassic World: Fallen Kingdom) படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் யூ-டியூபில் வெளியிடப்பட்டது. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தயாரிப்பில் வெளி வர உள்ள இந்தப் படத்தை ஜே.ஏ.பயானோ (J.A.Bayona) இயக்குகிறார். இந்தப் படம் 2018 ஜுன் மாதம் 22-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது. மேலும் வெளியான மூன்று நாட்களிலேயே இந்த ட்ரெய்லருக்கு 20 மில்லியன் பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர்.  தற்போது கிட்டத்தட்ட 30 மில்லியனை நோக்கி இந்த எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

1993-ம் ஆண்டு ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் 'ஜுராஸிக் பார்க்'  வெளியாகி உலக ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இந்தப் படம் மூன்று ஆஸ்கர் விருதுகள் உட்பட 20 விருதுகளை வென்றது. 'ஜுராஸிக் பார்க்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'ஜுராஸிக் பார்க் 2', 'ஜுராசிக் பார்க் 3' ஆகிய படங்களும் வெளி வந்து ஜுராஸிக் பட வரிசை டிரையாலஜியை பூர்த்தி செய்தன 

விடாது கருப்பு என்பது போல் டைனோசர் படங்களுக்கு உள்ள வரவேற்பும் வணிகமும் உலக திரை ரசிகர்களை ஆக்ரமிக்க, 2015-ம் ஆண்டு வெளிவந்த 'ஜுராஸிக் வேர்ல்ட்' அதற்கு சரியான தீனியாக இருந்தது. மீண்டும் ஒரு டினோஸர் வகையறா படங்களின் தொடக்கமாக திகழ்ந்து வசூலிலும் சக்கை போடு போட்டது. இந்தப் படத்தின் அடுத்த பாகமாக வெளிவர உள்ளது ஜுராஸிக் வேர்ல்ட் : ஃபாலன் கிங்டம்.

YouTube video thumbnail
ஜுராசிக் வேர்ல்ட் முந்தைய பாகத்தில் நடித்த கிறிஸ் பிராட் இதிலும் நடிக்கிறார். 2 நிமிடம் 26 வினாடிகள் ஓடும் இந்த ட்ரெய்லர் உண்மையில் மெய் சிலிர்க்க வைக்கிறது. படம் திரைக்கு வரும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள் உலகத் திரை ரசிகர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.