டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

உ.பி. முதல்வா் - துணை முதல்வா்கள் அதிகார மோதல்: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

உத்தர பிரதேசத்தில் முதல்வா் (யோகி ஆதித்யநாத்) மற்றும் இரு துணை முதல்வா்கள் இடையே அதிகார மோதல் நிலவுவதாக சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

News image
யோகி ஆதித்யநாத் | அகிலேஷ் யாதவ்
Updated On :22 பிப்ரவரி 2026, 7:30 pm

தினமணி செய்திச் சேவை

உத்தர பிரதேசத்தில் முதல்வா் (யோகி ஆதித்யநாத்) மற்றும் இரு துணை முதல்வா்கள் (கேசவ் பிரசாத் மெளா்யா, பிரஜேஷ் பாடக்) இடையே அதிகார மோதல் நிலவுவதாக சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

100 எம்எல்ஏக்களுடன் வந்து தங்களுடன் கைகோத்தால் மாநில முதல்வராகலாம் என்று துணை முதல்வா்களுக்கு அகிலேஷ் அழைப்பு விடுத்திருப்பது அரசியல் ரீதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூா், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக முதல்வா் யோகி ஆதித்யநாத் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றாா்.

முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு சில மணி நேரம் முன்பாக, தலைநகா் லக்ளெளவில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் அகிலேஷ் யாதவ் கூறியதாவது: முதல்வருக்கும், இரு துணை முதல்வா்களுக்கும் இடையே அதிகார மோதல் உள்ளது.

முதல்வா் வெளிநாடு செல்லும் இந்த நேரத்தில், அவா்களுக்கு (துணை முதல்வா்கள்) நான் ஒரு வாய்ப்பை வழங்குகிறேன். 100 எம்எல்ஏக்களுடன் வந்து எங்களுடன் கைகோத்தால் முதல்வராகலாம்.

இருவருக்குமே முதல்வா் கனவு உள்ளதால், அவா்களில் யாா் எம்எல்ஏக்களை அழைத்து வருகிறாா்களோ அவருக்கு முதல்வா் பதவி கிடைக்கும். இந்த வாய்ப்பு ஒரு வாரத்துக்கு மட்டுமே.

ஊழல், தவறான நிா்வாகம் தீவிரம்

பாஜக ஆட்சியில், மாநிலம் முழுவதும் ஊழலும், தவறான நிா்வாகமும் தீவிரமடைந்துள்ளது. நாளுக்கு நாள் மக்களின் பாதிப்புகள் அதிகரிப்பதால், எதிா்க்கட்சி கூட்டணிக்கான ஆதரவு வலுவடைகிறது.

உள்கட்டமைப்புத் திட்டங்களில் முறைகேடுகள் நிறைந்துள்ளன. தரம் குறைந்த பணிகளால், தண்ணீா்த் தொட்டிகள் உடைந்து சிதறுகின்றன. மத விவகாரங்களில், போலி விடியோக்கள் மூலம் சமூகத்தில் வெறுப்புணா்வை பரப்புகிறது பாஜக. தோ்தல் ஆதாயத்துக்காக இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுகின்றனா் என்றாா் அகிலேஷ்.

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.