/

விவசாயிகளின் நலனுக்கு எதிராக பாஜக நடவடிக்கை: அகிலேஷ் யாதவ்!

பாஜக மீண்டும் விவசாயிகளைத் தாக்குவதாக அகிலேஷ் குற்றச்சாட்டு..

News image
சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ்- ANI
Updated On :3 பிப்ரவரி 2026, 9:30 am

இணையதளச் செய்திப் பிரிவு

பாஜக மீண்டும் விவசாயிகளைத் தாக்குவதாக சமஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மத்திய அரசைக் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த திங்களன்று (பிப். 2) ஒப்புதல் வழங்கியுள்ளார். மேலும், இந்திய பொருள்கள் மீது விதிக்கப்பட்டிருந்த 25 சதவீத வரியை 18 ஆகக் குறைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமெரிக்க விவசாயப் பொருள்களுக்கு இந்தியச் சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படும் எனவும், இதனால் அமெரிக்க விவசாயத் துறை அதிக லாபம் ஈட்டுவதாகவும் அவர் கூறினார்.

இதனால், விவசாயத்தைச் சார்ந்துள்ள நாட்டு மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 70 சதவீதத்தினருக்குச் செய்யப்படும் துரோகம் என்று அவர் கூறினார்.

இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டதைத் தொடர்ந்து அகிலேஷ் யாதவ் இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன.

பாஜக மற்றும் அதன் கூட்டாளிகள் சுதந்திரத்திற்கு முன்பே வெளிநாட்டு நலன்களின் அக்கறையாக இருந்தனர் என்றும், இன்றும் அப்படித்தான் தொடர்கின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

நாட்டின் பொருளாதாரத்தில் சமரசம் செய்துகொண்டு எவ்வளவு "கமிஷன்" சம்பாதித்தார்கள் என்பதை பாஜக தலைவர்கள் பொதுமக்களுக்கு விளக்க வேண்டும்.

இந்த ஒப்பந்தம் விவசாயிகள் மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்திற்கும் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

summary

Samajwadi Party leader Akhilesh Yadav has strongly criticized the central government, accusing the BJP of attacking farmers once again.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.