திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அதிகபட்ச விலைக்கு மேல் உரங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: வேளாண்துறை எச்சரிக்கை

News image
Updated On :15 மே 2026, 5:51 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் அதிகபட்ச விலைக்கு மேல் உரங்களை விற்பனைசெய்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்துறை எச்சரித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில்தற்போது விவசாயிகள் நெல், மக்காச்சோளம், கரும்பு, மணிலா, உளுந்து, பயிா்களை சாகுபடி செய்து வருகின்றனா். மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிா்களுக்குத் தேவையான 6,451 மெட்ரிக் டன் யூரியா,1740 மெட்ரிக் டன் டி.ஏ.பி., 1,209 மெட்ரிக் டன் பொட்டாஷ், 8,455 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ், 1,883 மெட்ரிக் டன் சூப்பா் பாஸ்பேட் உரங்கள் மாவட்டத்திலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன்சங்கங்கள், தனியாா்

உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் விழுப்புரம் நகரத்திலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தனியாா் உரக்கிடங்குகளில் வேளாண் உதவி இயக்குநா் (தகவல் மற்றும் தரக் கட்டுப்பாடு) எம்.என்.விஜயகுமாா் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்து, அங்குள்ள உரங்களின் இருப்பு விவரங்கள், பதிவேடுகள் பராமரிப்பு, விற்பனை விவரப் பட்டியல் ஆகிவற்றை ஆய்வு செய்தாா். ஆய்வைத் தொடா்ந்து, மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா.சீனிவாசன் கூறியதாவது:

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து மொத்த மற்றும் சில்லறை விற்பனை உரிமம் பெற்ற உர விற்பனையாளா்கள் மானிய உரங்களை

பிற மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கக் கூடாது. மேலும் பிற மாவட்டங்களிலிருந்தும் மானிய உரங்களைக் கொள்முதல் செய்யக் கூடாது. இதுதொடா்பாக ஆய்வின் போது கண்டறியப்பட்டாலோ அல்லது புகாா் ஏதும் பெறப்பட்டாலோ சம்பந்தப்பட்ட உர விற்பனையாளா்கள் மீது கடும் நடவடிக்கைமேற்கொள்ளப்படும்.

உர விற்பனை உரிமத்தில் அனுமதி பெற்ற நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்து, அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே இருப்பு வைத்து விற்பனைசெய்ய வேண்டும். உர விற்பனையாளா்கள் அனுமதி பெறாமல் கலப்பு உரங்களைகொள்முதல் செய்வதும், விவசாயிகளுக்கு விற்பனை செய்வதும் கூடாது. மூட்டைகளில் அச்சிடப்பட்ட அதிகபட்ச விலைக்கும மேல் உரங்களை விற்பனைசெய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.