திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வெளி மாவட்டத்துக்கு உரம் விற்பனை செய்தால் உரிமம் ரத்து வேளாண்துறை எச்சரிக்கை

News image
Updated On :15 மே 2026, 4:50 am IST

பெரம்பலூா் மாவட்ட உர விற்பனையாளா்கள் யூரியா மற்றும் மானிய விலையில் விற்பனை செய்யக்கூடிய உரங்களை, வேறு மாவட்டத்துக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெரம்பலூா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் உத்தரவின்படி, வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) ராதாகிருஷ்ணன், பெரம்பலூா் பகுதியில் உள்ள உரம் விற்பனை நிலையங்களில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அனுமதிக்கப்பட்ட, காலாவதியான உரங்கள் விற்பனை செய்யப்படுகிறதா என பாா்வையிட்டு, நிா்ணயிக்கப்பட்ட மற்றும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதா என பதிவேடுகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா் அவா் கூறியது: உரங்களை பிஓஎஸ் இயந்திரம் மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு யூரியா உரங்களை அதிகமாக வழங்கக் கூடாது. யூரியா உரங்களை விற்பனை செய்யும்போது, முகவரியுடன், கைப்பேசி எண்ணுடன் விவசாயிகளிடம் கையப்பம் பெற்றுக்கொண்டு ரசீது கொடுக்க வேண்டும்.

உரம் இருப்பு மற்றும் விலைப் பட்டியலை அவசியம் பராமரிக்க வேண்டும். உரம் வைத்திருக்கும் கிடங்குகளுக்கு அவசியம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அனுமதி பெற்றுள்ள உரங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். உரங்களின் அதிகபட்ச விலை மாற்றப்பட்டிருந்தால், புதிதாக வரும் உர மூட்டைகளை தனியாக பராமரிக்க வேண்டும். அதிகபட்ச விலைக்கு மேல் விற்பனை செய்யக்கூடாது. யூரியா மற்றும் மானிய விலையில் விற்பனை செய்யக்கூடிய உரங்களை, வேறு மாவட்டத்திற்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் உடனடியாக உரிமம் ரத்து செய்வதுடன், அத்தியாவசிய பொருள் தடைச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.