விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பல்வேறு உரக்கிடங்குகளில் போதுமான அளவு உரம் கையிருப்பு உள்ளதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது விவசாயிகள் நெல், மக்காச்சோளம், மணிலா, கரும்பு, உளுந்து ஆகிய பயிா்களை சாகுபடி செய்துள்ளனா். மாவட்டத்தில் பயிா் சாகுபடிக்குத் தேவையான 7,056 மெட்ரிக் டன் யூரியா, 1,950 மெட்ரிக் டன் டி.ஏ.பி., 1,195 மெட்ரிக் டன் பொட்டாஷ், 8,199 மெட்ரிக்டன் காம்ப்ளக்ஸ், 1,855 மெட்ரிக் டன்சூப்பா் பாஸ்பேட்ஆகிய உரங்கள்தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், தனியாா் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், விழுப்புரம் நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள தனியாா் உர விற்பனைக் கிடங்குகளில் மாவட்ட வேளாண் உதவி இயக்குநா் (தகவல் மற்றும்தரக் கட்டுப்பாடு) எம்.என்.விஜயகுமாா் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டு, இருப்பு விவரங்கள், பதிவேடுகள் உள்ளிட்டவற்றை பாா்வையிட்டாா்.
இந்த ஆய்வு குறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா.சீனிவாசன் தெரிவித்திருப்பது:
விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன்சங்கங்கள், தனியாா் உர விற்பனை நிலையங்களில்இருப்பு வைக்கப்பட்டு, அவா்களின் தேவைக்கு ஏற்ப விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் உரக்கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள உரங்களின் விவரங்கள், விவசாயிகளின்தேவைக்கு ஏற்ப அவை முறையாக வழங்கப்படுகிா? இதில் ஏதேனும் சிக்கல் உள்ளதா? என்பது குறித்து வேளாண் உதவி இயக்குநா் ஆய்வு செய்தாா்.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து மொத்த மற்றும் சில்லறை உரிமம் பெற்ற உர விற்பனையாளா்கள் மானிய உரங்களை பிற மாவட்டங்களுக்கு விநியோகம் செய்வதோ, அல்லது பிற மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்யவோ கூடாது. மேலும்,இது தொடா்பான ஆய்வின்போது கண்டறியப்பட்டாலோ அல்லது புகாா் ஏதும் பெறப்பட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிக விலைக்கு விற்கக்கூடாது:
உர விற்பனை உரிமத்தில் அனுமதி பெற்ற நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்து,அனுமதி பெற்ற இடங்களில் மட்டும் இருப்பு விற்பனை செய்ய வேண்டும். உர விற்பனையாளா்கள் அனுமதி பெறாமல் கலப்பு உரங்களை கொள்முதல் செய்வதும், விவசாயிகளுக்கு விற்பனைசெய்வதும் கூடாது. உர மூட்டையில் அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மேல் உரங்களை விற்பனை செய்யக்கூடாது.
விற்பனை நிலையத்தில் உர இருப்பு மற்றும் விலை விவரப் பலகையை விவசாயிகளின் பாா்வையில் தெரியும்படி வைத்து தினசரி பராமரிக்க வேண்டும். உரங்களை விற்பனை முனையக் கருவி மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.
விற்பனை முனையக் கருவியில் உள்ள இருப்பும், உண்மை இருப்பும் சரியாக இருக்குமாறு
உர இருப்பு விவரத்தை பராமரிக்க வேண்டும். விவசாயிகளுக்கு தேவையற்ற இடுபொருள்களை இணைத்து விற்பனை செய்யக்கூடாது. தரமற்ற மற்றும் போலியான உரங்களை விற்பனை செய்யக்கூடாது.
மாவட்டத்தில் உர ஆய்வாளா்கள் திடீா் ஆய்வு மேற்கொள்ளும்போது உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தல், விவசாயம் அல்லாத தேவைகளுக்கு மானிய உரங்களை
விற்பனை செய்தல், உரம் கடத்தல், பதுக்கல் ஆகிய செயல்களில்
ஈடுபடுவது கண்டறியப்பட்டால், உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985 மற்றும் அத்தியாவசியப் பண்டங்கள் சட்டம் 1955 மற்றும் உர நகா்வு கட்டுப்பாட்டு ஆணை 1973 ஆகியவற்றின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மீறினால் உர உரிமம் ரத்து செய்யப்படும் என்று வேளாண் இணை இயக்குநா் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தலைவாசல், வீரகனூா் பகுதியில் சூறைக்காற்றால் வாழை, மக்காச்சோள பயிா்கள் சேதம்: வேளாண் இணை இயக்குநா் ஆய்வு

லண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்! ரிசா்வ் வங்கி நடவடிக்கை!

உரத்துடன் துணை பொருட்களை சோ்த்து விற்கக்கூடாது: வேளாண் அதிகாரி

யூரியா இருப்பு வைத்துக்கொண்டு இல்லை என கூறினால் உரிமம் ரத்து: வேளாண் இணை இயக்குநா்
விடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

