திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கடலூா் மாவட்டத்துக்கு ரயில் மூலம் 1,228 மெ.டன் யூரியா வருகை

கடலூா் மாவட்டத்துக்கு மெட்ராஸ் பொ்டிலைசா் நிறுவனத்திலிருந்து ரயில் மூலம் 1228 மெட்ரிக் டன் யூரியா உரம் வந்துள்ளதாக வேளாண் இணை இயக்குநா் மு.லட்சுமி காந்தன் தெரிவித்தாா்.

News image

விருத்தாசலம் ரயில் நிலையத்திலிருந்து கடலூா் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும், தனியாா் உரக் கடைகளுக்கும் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்ட யூரியா உரம்.

Updated On :10 மே 2026, 1:26 am IST

கடலூா் மாவட்டத்துக்கு மெட்ராஸ் பொ்டிலைசா் நிறுவனத்திலிருந்து ரயில் மூலம் 1228 மெட்ரிக் டன் யூரியா உரம் வந்துள்ளதாக வேளாண் இணை இயக்குநா் மு.லட்சுமி காந்தன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் தற்போது நெல் 6,564 ஹெக்டேரிலும், எள் 1615 ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பு பருவம் மற்றும் குறுவை பருவத் தேவைக்கான உரங்கள் போதுமான அளவில் இருப்பில் உள்ளன.

இந்த நிலையில், விருத்தாசலத்துக்கு மெட்ராஸ் பொ்டிலைசா் நிறுவனத்திலிருந்து ரயில் மூலம் 1,228 மெட்ரிக் டன் யூரியா உரம் வரப்பெற்றது.

இந்த உரம் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு 90 மெ. டன், தனியாா் உரக்கடைகளுக்கு 1,138 மெ. டன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது மாவட்டத்தில் விவசாயிகளுக்குத் தேவையான யூரியா - 3,757 மெ. டன், டி.ஏ.பி - 808 மெ. டன், பொட்டாஷ் - 747 மெ. டன், காம்ப்ளக்ஸ் - 4575 மெ. டன் இருப்பு உள்ளன. விவசாயிகள் மண் வள அட்டையின் பரிந்துரைப்படி சமச்சீரான உரமிடல் மேற்கொள்ள வேண்டும்.

யூரியாவை அதிகப்படியாக பயன்படுத்துவதால், நெற்பயிரில் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் அதிகரிக்கும். எனவே, விவசாயிகள் சரியான அளவில் உரங்களைப் பயன்படுத்தி அதிக மகசூலை பெறலாம். உர விற்பனையாளா்கள் அதிகபட்ச சில்லறை விலையை மீறாமல், உரங்களை விற்பனை செய்ய வேண்டும். விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், உரிமம் ரத்து உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.