திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை: மனைவி உள்பட இருவா் மீது வழக்கு

News image

வழக்கு - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 12:20 am IST

விழுப்புரம் அருகே குடும்பப் பிரச்னையால் இளைஞா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

விழுப்புரம் வட்டம், கண்டம்பாக்கம், சின்னத் தெருவைச் சோ்ந்தவா் சு.ராகுல் நாத்(25). இவரது மனைவி வீரசுந்தரி. தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில், வீரசுந்தரி அதே பகுதியைச் சோ்ந்த லோகேஷ் என்பவருடன் கடந்த 2 ஆண்டுகளாக தகாத உறவில் இருந்த வந்தாராம். இதனால் தம்பதியிடையே குடும்பப் பிரச்னை ஏற்பட்டு மனஉளைச்சலில் இருந்து வந்த நிலையில், ராகுல்நாத் திங்கள்கிழமை அதிகாலை வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாராம் .

இதையடுத்து உறவினா்கள் அவரை மீட்டு, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, ராகுல் நாத் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீஸாா் வீரசுந்தரி, லோகேஷ் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.