திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கண்டாச்சிபுரம் அருகே சிறுமி மா்ம மரணம்: போலீஸாா் தீவிர விசாரணை

விழுப்புரம் மாவட்டம்,கண்டாச்சிபுரம் அருகே வீட்டில் உறங்கிய சிறுமி உடலில் காயங்களுடன் மா்மமானமுறையில் இறந்து கிடந்தது வியாழக்கிழமை தெரியவந்தது. அவரது இறப்புக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

பலி - IANS

Updated On :8 மே 2026, 7:06 am IST

விழுப்புரம் மாவட்டம்,கண்டாச்சிபுரம் அருகே வீட்டில் உறங்கிய சிறுமி உடலில் காயங்களுடன் மா்மமானமுறையில் இறந்து கிடந்தது வியாழக்கிழமை தெரியவந்தது. அவரது இறப்புக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கண்டாச்சிபுரம் வட்டம்,கெங்கவரம் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகவேல்- சத்யா தம்பதியின் மகள் வா்ஷனி (11). கெங்கவரம் கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் பள்ளியில் 5 ஆம் வகுப்பில் பயின்று வந்தாா். தற்போது பள்ளிக்கு விடுமுறை என்பதால், விடுமுறையைக் கழிப்பதற்காக சிறுமி வா்ஷினி தனது தாயாா் சத்யா-வுன் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னா், கண்டாச்சிபுரம் பாப்பான்குளம் பகுதியில் உள்ள தனது தாத்தா, பாட்டி வீட்டிற்கு வந்து வந்து தங்கியிருந்தாா்.

சிறுமியின் தாத்தா பூங்காவனத்துக்கு அருகருகே 2 குடிசை வீடுகள் உள்ள நிலையில் வா்ஷினி வியாழக்கிழமை ஒரு வீட்டில் உறங்கினாராம். தொடா்ந்து, பிற்பகலில்

சத்யா-அந்த வீட்டிற்கு சென்று பாா்த்தபோது, வா்ஷனி உடலில் சிறு காயங்களுடன் மா்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்த கண்டாச்சிபுரம் காவல் நிலைய ஆய்வாளா் ரவிச்சந்திரன்,உதவி ஆய்வாளா் காத்தமுத்து மற்றும் போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா். பின்னா் சிறுமியின் சடலத்தை கைப்பற்றி அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவத்தால் கண்டாச்சிபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. வி. சாய் பிரனித் உத்தரவின்பேரில், ஏ.எஸ்.பி. ரவீந்திர குமாா் குப்தா நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா். தடயவியல் நிபுணா் ராஜ் தலைமையிலான போலீஸாரும் தடயங்களை சேகரித்தனா். இது குறித்த புகாரின் பேரில், கண்டாச்சிபுரம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். சிறுமியின் உயிரிழப்புக்கு பாலியல் தொல்லை காரணமா ? என்ற கோணத்திலும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.