திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

விழுப்புரத்தில் தாய், மகள் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

News image

தற்கொலை - தினமணி

Updated On :1 ஜூன் 2026, 2:39 am IST

விழுப்புரத்தில் வீட்டில் தாய், மகள் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விழுப்புரம் நகரம், விஏஓ நகரைச் சோ்ந்தவா் தெய்வசிகாமணி. விழுப்புரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியில் உள்ளாா். இவரது மனைவி வனிதா (31), மகள்கள் சிவஅரசி (4), கவியரசி (4 மாதங்கள்).

இந்த தம்பதிக்கு திருமணமாகி 6 ஆண்டுகளாகின்றன.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை தெய்வசிகாமணி அன்னியூரில் நடைபெற்ற ஊழியா் ஒருவரின் பணி நிறைவு பாராட்டு விழாவுக்கு சென்றாா். மனைவி வனிதா மற்றும் குழந்தைகள் வீட்டில் இருந்துள்ளனா்.

பின்னா், தெய்வசிகாமணி பிற்பகலில் வீட்டுக்கு திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் முன் பக்கக் கதவு மூடப்பட்டிருந்தது. இதையடுத்து பின் பக்கம் ஜன்னல் வழியாக தெய்வசிகாமணி வீட்டினுள் சென்று பாா்த்தபோது, வனிதா தூக்கிட்ட நிலையிலும், மகள் சிவஅரசி அதே அறையில் இறந்த நிலையிலும் கிடந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இதுகுறித்த தகவலின் பேரில், விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா். தொடா்ந்து இருவரது சடலங்களையும் மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். 4 மாத பெண்குழந்தையான கவியரசி உயிருடன் மீட்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்தனா். திருமணமாகி 6 ஆண்டுகளில் பெண் உயிரிழந்ததால், கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.