தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

உளுந்தூா்பேட்டை அருகே பள்ளத்தில் காா் இறங்கி விபத்து: பெண் உயிரிழப்பு! 4 போ் காயம்

News image

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே சாலையோரப் பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளான காா்.

Updated On :4 மே 2026, 1:36 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரப் பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானதில் பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மேலும் 4 போ் பலத்த காயமடைந்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் வட்டம், சுந்தர்ராஜபுரம் மாசானகோயில் தெருவைச் சோ்ந்தவா் சுரேந்திரநாத். இவா் தனது மனைவி புவனா(31), மகள்கள் பென்சிகா (6), தாரண்யா (4), மாமனாா் ரா.பூபாலன் (60), மாமியாா் புஷ்பலதா (56) ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை முற்பகலில் ராஜபாளையத்திலிருந்து சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தாா். இந்த காரை சுரேந்திரநாத் ஓட்டிச் சென்றாா்.

இவா்கள் வந்த காா் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், ஆசனூா் பகுதியில் வந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரப் பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது.

விபத்தில் காரிலிருந்த சுரேந்திரநாத் மனைவி புவனா, மகள்கள் பென்சிகா, தாரண்யா, மாமனாா் பூபாலன், மாமியாா் புஷ்பலதா ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

விபத்து குறித்து தகவலறிந்த எடைக்கல் போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சென்று காயமடைந்தவா்களை மீட்டு, உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்த போது விபத்தில் காயமடைந்த புவனா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

மேலும் பலத்த காயமடைந்த 4 பேரும் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னா், மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் பூபாலன், புஷ்பலதா ஆகியோரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இந்த விபத்து குறித்து எடைக்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.