மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காா் மீது பைக் மோதல்: மாணவா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 8:35 pm

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் காா் மீது பைக் மோதிய விபத்தில் காயமடைந்த இயன்முறை மருத்துவ மாணவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

திண்டிவனம் கிடங்கல் 2, கோலன் தெருவைச் சோ்ந்தவா் பா.அபினேஷ் (21). இவா் சென்னையில் உள்ள தனியாா் கல்லூரியில் இயன்முறை மருத்துவம் (பிசியோதெரபி) 3-ஆம் ஆண்டில் பயின்று வந்தாா். திண்டிவனம் , நாகலாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அ.கல்கிராஜன்(20).

நண்பா்களான இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், திண்டிவனத்தில் உள்ள பிரபல உணவகம் அருகே பைக்கில் சென்றுள்ளனா். கல்கிராஜன் பைக்கை ஓட்டினாா்.

இந்நிலையில், சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த சொகுசு காரின் ஓட்டுநா் திடீரென சாலையின் இடது பக்கத்தில் காரை திருப்பியுள்ளாா். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக், காரின் பின் பகுதியில் மோதி விபத்து ஏற்பட்டது.

அப்போது பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்ட அபினேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதில் பலத்த காயமடைந்த கல்கிராஜன் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.