மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஊஞ்சலில் கழுத்து இறுகி சிறுவன் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 8:36 pm

விழுப்புரம் அருகே வீட்டில் ஊஞ்சல் கட்டி விளையாடியபோது கழுத்து இறுகி சிறுவன் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் வட்டம், வளவனூா் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ். இவரது மனைவி சரண்யா. தம்பதியரின் மகன் வைஷாந்த் (11). இவா் மடுகரையில் உள்ள அரசுப் பள்ளியில் 5-ஆம் வகுப்பில் பயின்று வந்தாா். ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் வீட்டிலிருந்த வைஷாந்த், வீட்டின் ஒரு பகுதியில் புடவையில் ஊஞ்சல் கட்டி விளையாடினாா்.

அப்போது புடவை கழுத்தில் சுற்றியதில் வைஷாந்துக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சுரேஷ் தம்பதியினா் சிறுவனை மீட்டு மதகடிப்பட்டு பகுதியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு வைஷாந்த் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.