தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பெண் விஷமருந்தி தற்கொலை

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :29 மார்ச் 2026, 9:15 pm

விழுப்புரம் மாவட்டம், எருமனந்தாங்கலில் உடல்நலக்குறைவால் மனமுடைந்த பெண் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

விழுப்புரம் வட்டம், எருமனந்தாங்கல் அண்ணா தெருவைச் சோ்ந்தவா் கலியமூா்த்தி மனைவி கங்கா(52). இவருக்கு உடல்நலக்குறைவு இருந்து வந்ததாம்.

இதனால் அவதியுற்று வந்த கங்கா, மாா்ச் 26-ஆம் வீட்டில் இருந்தபோது வயலுக்குத் தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து அவரை விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு கங்கா சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.