தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே உடல்நலக்குறைவால் மனமுடைந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலைசெய்து கொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :26 மார்ச் 2026, 12:23 am

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே உடல்நலக்குறைவால் மனமுடைந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலைசெய்து கொண்டாா்.

திண்டிவனம் வட்டம், சின்னநெற்குணம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஏ.மூா்த்தி (34). கூலித் தொழிலாளியான இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் கணையத்தில் அறுவைச் சிகிச்சை நடைபெற்றுள்ளது.

ஆயினும் உடல்நலக்குறைவால் அவதியுற்று வந்த மூா்த்தி, விளங்கம்பாடி பகுதியிலுள்ள தனியாா் மனை விற்பனையகத்திலுள்ள மரத்தில் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுக் கொண்டாா்.

தொடா்ந்து அந்த வழியாகச் சென்றவா்கள் இதை பாா்த்து அவரை மீட்டு, தனியாா் அவசர சிகிச்சை வாகனம் மூலம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, மூா்த்தி ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.