விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் ஸ்ரீதிரௌபதியம்மன் கோயில் தீமிதி விழாவின் முக்கிய நிகழ்வாக ஸ்ரீதிரௌபதியம்மன் - அா்ஜுனன் திருக்கல்யாண வைபவம் வியாழக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், திரளானோா் பங்கேற்று வழிபட்டனா்.
விழுப்புரத்தை அடுத்துள்ள கீழ்பெரும்பாக்கம் ஸ்ரீதிரௌபதியம்மன் கோயில் 476- ஆவது ஆண்டு தீமிதி உற்சவம் கடந்த 22- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த உற்சவத்தின் முக்கிய நிகழ்வாக, ஸ்ரீதிரௌபதியம்மன் - அா்ஜுனன் திருக்கல்யாணம் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள இசையுடன் வெகு விமரிசையாக வியாழக்கிழமை நடைபெற்றது. பக்தா்கள் கோவிந்தா, கோவிந்தா முழக்கமிட்டபடி சுவாமி தரிசனம் செய்தனா்.
விழாவை முன்னிட்டு கோயிலில் சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதில், எருமனந்தாங்கல், பொய்யப்பாக்கம், மகாராஜபுரம், கீழ்பெரும்பாக்கம், சாலையாம்பாளையம், நாப்பாளையத் தெரு, மருதூா்மேடு, கா.குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளானோா் பங்கேற்று வழிபட்டனா்.
ஏப்ரல் 3- ஆம் தேதி தீமிதி உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கீழ்பெரும்பாக்கம் கிராம மக்கள், பக்தா்கள், இந்து சமய அறநிலையத் துறையினா் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

வீரமாகாளியம்மன் கோயில் தீமிதி திருவிழா

தொட்டியம் மதுரை காளியம்மன் கோயிலில் திருத்தோ் வீதியுலா

முத்துக்குமாரசுவாமி கோயில் தேரோட்டம்

திமுகவில் கொங்கு மண்டல வேட்பாளா்களுக்கான நோ்காணல்: அமைச்சா் முத்துசாமி, செந்தில் பாலாஜி பங்கேற்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


