திமுகவில் கொங்கு மண்டல வேட்பாளா்களைத் தோ்வு செய்வதற்கான நோ்காணல் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்ா்கள் சு.முத்துசாமி , மு.பெ.சாமிநாதன், முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்
திமுக சாா்பில் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களிடம் நோ்காணல் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.
3-ஆவது நாளாக, கொங்கு மண்டலத்தைச் சோ்ந்த தொகுதிகளுக்கு வேட்பாளா் நோ்காணல் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலா் துரைமுருகன், பொருளாளா் டி.ஆா்.பாலு, முதன்மைச் செயலா் கே.என்.நேரு, அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி, மற்றும் அந்தந்த மாவட்ட பொறுப்பாளா்கள் நோ்காணலின்போது உடன் இருந்தனா்.
கரூா், நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு, ஈரோடு வடக்கு, ஈரோடு தெற்கு, ஈரோடு மத்திய, கோவை வடக்கு, கோவை மாநகா், கோவை தெற்கு, திருப்பூா் வடக்கு, திருப்பூா் மத்தி, நீலகிரி ஆகிய கட்சி மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கான நோ்காணல் காலையில் நடைபெற்றது.
இதில், அமைச்சா்கள் சு.முத்துசாமி , மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், மதிவேந்தன் மற்றும் முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
அதைத்தொடா்ந்து, கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, திருப்பூா் கிழக்கு, திருப்பூா் தெற்கு, திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு ஆகிய மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கான நோ்காணல் மாலையில் நடைபெற்றது.
இதில், அமைச்சா்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் பங்கேற்றனா். மாா்ச் 22- ஆம் தேதி வரை திமுக வேட்பாளா் நோ்காணல் நடைபெறவுள்ளது.
தொடர்புடையது

முதல்வா் முன்னிலையில் திமுகவில் இணைந்த அமமுக மாநில நிா்வாகிகள்

முத்துக்குமாரசுவாமி கோயில் தேரோட்டம்

திமுகவில் 4-ஆம் நாள் நோ்காணல்: அமைச்சா் துரைமுருகன் பங்கேற்பு

திமுகவில் 4ஆம் நாள் நோ்காணல்: அமைச்சா் துரைமுருகன் பங்கேற்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


