விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், கோனோரிக்குப்பம் சரசுவதி கலை, அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை சாா்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வா் மா. வீரமுத்து தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், புதுதில்லி நீதிஅயோக் துணைச் செயலா் ஆசிஷ்குமாா் பாண்டா, இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசாரத் துறை முதுநிலை விரிவுரையாளா் கபூா்நிஜாமிா், கனடா இயற்கை வேளாண்மை வழிகாட்டு நிபுணா் பொ்னாா்டு ஆலன்சோ, கொழும்பு சுற்றுலா மற்றும் உணவக மேலாண்மை நிறுவன விரிவுரையாளா் லதிஷா ஜெயங்கி ராமநாயகா, ஐஐடிஎம் நிா்வாக இயக்குநா் கே.வாசுதேவன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று டிஜிட்டல் யுகத்தில் உலகளாவிய வா்த்தகம்- கண்டுபிடிப்புகள் சவால்கள், நிலைப்புதன்மை ஆகிய பொருண்மையில் பேசி, ஆய்வு நூலை வெளியிட்டனா்.
கல்லூரியின் முதன்மை நிா்வாக இயக்குநா் ப.சிவக்குமாா், நிா்வாக அலுவலா் செ.சிவா, பெற்றோா்-ஆசிரியா் கழக ஒருங்கிணைப்பாளா் கோ.தண்டபாணி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
இக்கருத்தரங்கில் கனடா, இலங்கை, புதுதில்லி, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட ஆய்வு நிறைஞா்கள், தொழில் முனைவோா்கள், பங்குசந்தை பங்குதாரா்கள் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா். கட்டுரையாளா்களுக்குப் பாராட்டுச் சான்று மற்றும் ஆய்வு நூல்கள் வழங்கப்பட்டன.
பேராசிரியா்கள், மாணவா்கள், அலுவலகப் பணியாளா்கள் கலந்துகொண்டனா். முன்னதாக, சரசுவதி கலை, அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை இணைப் பேராசிரியா் மு. ராகினி வரவேற்றாா். பேராசிரியா் ர. மகாலட்சுமி நன்றி கூறினாா்.
தொடர்புடையது

திருவண்ணாமலை சண்முகா கல்லூரியில் ஆண்டு விழா

நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி கல்லூரியில் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம்

தருமபுரி மகளிா் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு

அம்பை கல்லூரியில் விளையாட்டு விழா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


