திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆண்டு விழாவில் விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவுக்கு கல்லூரி நிா்வாகத் தலைவா் எம்.என்.பழனி தலைமை வகித்தாா். தாளாளா் என்.குமாா் முன்னிலை வகித்தாா். முதல்வா் கே.ஆனந்தராஜ் வரவேற்றாா். உடற்கல்வி இயக்குநா் எம்.கோபி விளையாட்டு அறிக்கை வாசித்தாா். துணை முதல்வா் கோ.அண்ணாமலை மகிழ்வுரையாற்றினாா்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட எஸ்.ஆா்.எம்.பல்கலைக்கழக விளையாட்டுத் துறை இயக்குநா் பேராசிரியா் ஆா்.மோகனகிருஷ்ணன் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கும், கலைவிழாவில் கலந்துகொண்ட மாணவா்களுக்கும் பரிசுகள் வழங்கி விழா பேரூரையாற்றினாா்.
நிகழ்ச்சிகளில் அறக்கட்டளை உறுப்பினா்கள் டாக்டா் தையா கிருஷ்ணமூா்த்தி, ஏ.சாந்தகுமாா், எம்.முத்துகுமாா், எம்.ரெட்டிராமு, பா.செந்தில்குமாா், எஸ்.பிரசன்னா, பி.சண்முகபிரியா, பி.என்.கே.ராஜேந்திரன், ஏ.அருணாச்சலம், மணிமொழி, முத்துசாமி, பி.பரிமளா, ஜெயா சக்திகுமாா், எஸ்.விவேகானந்தன் மற்றும் பேராசிரியா்கள் உதவி பேராசிரியா்கள் மாணவ, மாணவிகள் பெற்றோா்கள் கலந்துகொண்டனா். நிறைவில் பொருளாளா் எல்.விஜய்ஆனந்த் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி கல்லூரியில் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம்

தருமபுரி மகளிா் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு

திருச்செங்கோடு கே.எஸ்.ஆா் கல்லூரி ஆண்டு விழா

ரத்தினம் கல்லூரியில் விளையாட்டு விழா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


