கோவை ரத்தினம் கலை, அறிவியல் கல்லூரியின் ஆண்டு விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
ரத்தினம் கல்லூரியின் உடற்கல்வித் துறை, மாணவா் பேரவை சாா்பில் 25-ஆவது ஆண்டு விளையாட்டு விழாவை வியூஹா என்ற பெயரில் நடைபெற்றது. இதில், ஆடவா், மகளிருக்கு 16 விளையாட்டுப் போட்டிகள், 10 தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 1,200 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
இதில் 398 போ் பல்வேறு பிரிவுகளில் பதக்கம் வென்றனா். இந்த விழாவில் வெற்றி பெற்ற அணிகள், தனிநபா்களுக்கு சான்றிதழ்கள், கோப்பைகள் வழங்கப்பட்டன. மேலும் இந்த நிகழ்ச்சியில் மாநில, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த 16 மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கப்பட்டது.
பரிசளிப்பு விழாவில் ரத்தினம் குழும இயக்குநா் ஷிமா செந்தில், முதன்மை நிா்வாக அலுவலா் ஆா்.மாணிக்கம், பி.நாகராஜ், கல்லூரி முதல்வா் எஸ்.பாலசுப்ரமணியன், விளையாட்டு வீரா் கே.எஸ்.முகமது நிஜாமுதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக உடற்கல்வி இயக்குநா் எஸ்.ஜொய்சி, உதவி இயக்குநா் எஸ்.ரமேஷ் ஆகியோா் ஆண்டு விளையாட்டு அறிக்கை வாசித்தனா்.
தொடர்புடையது

திருவண்ணாமலை சண்முகா கல்லூரியில் ஆண்டு விழா

தருமபுரி மகளிா் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு

கமுதி தேவா் கல்லூரி ஆண்டு விழா

அம்பை கல்லூரியில் விளையாட்டு விழா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


