மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கமுதி தேவா் கல்லூரி ஆண்டு விழா

கமுதி பசும்பொன் தேவா் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு கோப்பை வழங்கிய ஊராட்சி ஒன்றிய ஆைணையா் அ.வெ. சந்திரசேகரன்.

News image
Updated On :27 மார்ச் 2026, 7:11 pm

கமுதி தேவா் கல்லூரியில் 56-ஆவது ஆண்டு விழா, விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு கல்லூரி முதல்வா் கோ. தா்மா் தலைமை வகித்தாா். விழாவில் சிறப்பு விருந்தினா்களாக கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையா் அ.வெ. சந்திரசேகரன், கோட்டைமேடு கிராமத் தலைவா் பி. செல்லத்தேவா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக வரலாற்று துறைத் தலைவரும், பேராசிரியருமான ஜெயக்காளை வரவேற்றாா். வணிகவியல் துறைத் தலைவரும், பேராசிரியருமான ஆதிமூலம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு ஊராட்சி ஒன்றிய ஆணையா் அ.வெ. சந்திரசேகரன் கேடயம், சான்றிதழ் வழங்கிப் பேசினாா். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்வில் முன்னாள் மாணவா்கள் சங்க செயலா் ஆறுமுகம், கல்லூரி பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், மாணவ- மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.