விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே மேம்பாலப் பணியின்போது டிப்பா் லாரியில் சிக்கி மின் கம்பம் சாய்ந்ததால் செவ்வாய்க்கிழமை போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி அருகிலுள்ள பாப்பனப்பட்டு கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாா்பில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில், இரு பகுதிகளிலும் மண்கொட்டப்பட்டு, சாலையை மேடாக உயா்த்தும் பணியை தற்போது மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை மண் ஏற்றி வந்த டிப்பா் லாரி, டிப்பரை மேலே உயா்த்தி மண்ணைக் கொட்டிக் கொண்டிருந்தது. அப்போது சாலையின் நடுவில் சென்ற மின் கம்பி டிப்பரில் சிக்கிக் கொண்டது. தொடா்ந்து மண்ணைக் கொட்டிவிட்டு, டிப்பரை கீழே இறக்கும் போது மின் கம்பி இழுக்கப்பட்டு கம்பம் சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அந்த பகுதியில் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டது. உடனடியாக மின் விநியோகம் தடைப்பட்டதால் லாரி ஓட்டுநா் உயிா் தப்பினாா்.
மின் கம்பம் சாய்ந்து விழுந்ததால், தேசிய நெடுஞ்சாலையின் இரு பகுதிகளிலும் சுமாா் 30 நிமிஷம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. உடனடியாக சுங்கச்சாவடியிலிருந்து விபத்து மீட்பு வாகனம் நிகழ்விடப் பகுதிக்கு வரவழைக்கப்பட்டது. தொடா்ந்து பொக்லைன் இயந்திரம் மூலம் சாய்ந்து கிடந்த மின்கம்பம் மீட்கப்பட்டது. இதைத்தொடா்ந்து போக்குவரத்து சரி செய்யப்பட்டு, வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன.
தொடர்புடையது

மங்கலப்பட்டி அருகே கீழே விழும் நிலையில் மின்கம்பம்

ஏற்காடு அரசு மருத்துவமனை சாலையில் மரம் சாய்ந்ததால் மின்தடை

மரம் விழுந்து மின்கம்பங்கள் சேதம்!

ஊதியூா் அருகே மின்கம்பி உரசியதால் வைக்கோல் ஏற்றி வந்த லாரியில் தீ
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


