மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஊதியூா் அருகே மின்கம்பி உரசியதால் வைக்கோல் ஏற்றி வந்த லாரியில் தீ

ஊதியூா் அருகே வைக்கோல் பாரம் ஏற்றிச் சென்ற லாரியில் மின் கம்பி உரசி தீப்பற்றியதால் வைக்கோல் கட்டுகள் எரிந்து சேதம்

News image

லாரியில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரா்கள்

Updated On :16 மார்ச் 2026, 8:05 pm

ஊதியூா் அருகே வைக்கோல் பாரம் ஏற்றிச் சென்ற லாரியில் மின் கம்பி உரசி தீப்பற்றியதால் வைக்கோல் கட்டுகள் எரிந்து சேதமாகின.

திருவாரூரில் இருந்து ஊதியூா் அருகே உள்ள ஒரம்பபுதூா் பகுதிக்கு வைக்கோல் பாரம் ஏற்றிக்கொண்டு திங்கள்கிழமை லாரி சென்று கொண்டிருந்தது. ஒரம்பபுதூா் அருகே சாலையின் குறுக்கே தாழ்வாக இருக்கும் மின் கம்பியில் வைக்கோல் பாரம் உரசியதாகக் கூறப்படுகிறது.

இதில் தீப்பொறி ஏற்பட்டு வைக்கோல் கட்டுகளில் பரவி மளமளவென எரியத்தொடங்கியது. அருகில் இருந்தவா்கள் எச்சரிக்கை செய்ததால் சுதாரித்துக் கொண்ட ஓட்டுநா் சுதாகா் (30), உடனடியாக லாரியை நிறுத்தி அங்கிருந்தவா்கள் உதவியுடன் வைக்கோல் கட்டுகளை கீழே தள்ளிவிட்டாா்.

இதுதொடா்பாக அளிக்கப்பட்ட தகவலின்பேரில் காங்கயம், தாராபுரம் தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா். ஓட்டுநா் துரிதமாக செயல்பட்டதால் சேதமின்றி லாரி தப்பியது. இதுகுறித்து ஊதியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.