விழுப்புரம் மாவட்டம், வீடுா் அணையில் மதகுகள் பராமரிப்பின்போது ஏற்பட்ட தீ விபத்தில் மூவா் செவ்வாய்க்கிழமை காயமடைந்தனா்.
வீடூா் அணையில் தற்போது பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான பணி ஒப்பந்தத்தை புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், சித்தாம்பூரைச் சோ்ந்த சவரிமுத்து (45) மேற்கொண்டு வருகிறாா். வீடூா் அணை மதகுகள் பராமரிப்புப் பணியில் சித்தாம்பூா் காா்த்திக் (36), திருச்சி மாவட்டம், குமரக்குடி அந்தோனி ஜோசப் (30), மணப்பாறை சோமசுந்தரம் (23) ஆகியோா் ஈடுபட்டு வந்தனா். பணிக்கான மேற்பாா்வையாளரான புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை முத்துக்குமாா் (39) இப்பணியைக் கண்காணித்து வந்தாா்.
அணையின் மதகில் வெல்டிங் செய்தபோது, அதிலிருந்த வெளியேறிய தீப்பொறிகள் கீழே வைத்திருந்த தின்னா் டின் மீது விழுந்தது. இதன் காரணமாக தின்னா் தீப்பற்றி வெடித்து சிதறியது. இதில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காா்த்திக், அந்தோனி ஜோசப், சோமசுந்தரம் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனா்.
இதைத்தொடா்ந்து அப்பகுதியிலிருந்தவா்கள் மூவரையும் மீட்டு, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மண்டபம் அருகே பைக்குகள் மோதல்: சிறுமி உள்பட மூவா் உயிரிழப்பு

சோலையாறு அணையில் புதிய மதகுகள் பொருத்தம்

பா்கூா் மலைப் பாதையில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: தொழிலாளா்கள் மூவா் படுகாயம்

குண்டேரிப்பள்ளம் அணையில் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


