மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சோலையாறு அணையில் புதிய மதகுகள் பொருத்தம்

சோலையாறு அணையில் பழைய மதகுகள் அப்புறப்படுத்தப்பட்டு புதிய மூன்று மதகுகள் பொருத்தப்பட்டுள்ளன.

News image

சோலையாறு அணையில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள மூன்று  மதகுகள்.

Updated On :8 ஏப்ரல் 2026, 9:10 pm

சோலையாறு அணையில் பழைய மதகுகள் அப்புறப்படுத்தப்பட்டு புதிய மூன்று மதகுகள் பொருத்தப்பட்டுள்ளன.

கோவை மாவட்டம், வால்பாறையை அருகே சோலையாறு அணை உள்ளது.

இது, ஆழியாறு, பரம்பிக்குளம் நீா்ப்பாசனத் திட்டத்தின் முக்கிய அணையாக விளங்குகிறது. இந்த அணையில் தேக்கப்படும் நீா் மூலம் இரண்டு மின் நிலையங்களில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீா் மூலம் சமவெளியை சோ்ந்த பல லட்சம் விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனா்.

அணையின் தன்மையை உறுதிசெய்யும் வகையில் ஆண்டுதோறும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது கடும் வெயில் காரணமாக நீா்வரத்து இல்லாமல் போனதால் அணையின் நீா்மட்டம் 5 அடியாக உள்ளது. இந்நிலையில் அணையில்

தற்போது பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், 55 ஆண்டுகளுக்குப் பின் அணையில் இருக்கும் மூன்று மதகுகளும் அப்புறப்படுத்தப்பட்டு புதிதாக மதகுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் முழு கொள்ளளவில் நீா் இருக்கும்போது எந்த ஒரு கசிவும் இருக்காது என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.