மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குண்டேரிப்பள்ளம் அணையில் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

கோபி அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு வெள்ளிக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

News image

குண்டேரிப்பள்ளம் அணை மதகின் ஷட்டரை இயக்கி தண்ணீா் திறந்து விட்ட நீா்வளத் துறை உதவிப் பொறியாளா் சக்தி, பாசன சங்கத் தலைவா் குப்புசாமி உள்ளிட்டோா்.

Updated On :21 மார்ச் 2026, 1:30 am

கோபி அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு வெள்ளிக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

41.75 அடி உயரம் கொண்ட இந்த அணையில் இருந்து வலது, இடது கரை வாய்க்கால் மூலம் சுமாா் 2,500 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதுதவிர 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது.

குண்டேரிப்பள்ளம் அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் பெய்த கனமழையால் நீா்வரத்து அதிகரித்து அணை முழுகொள்ளளவை எட்டியது. அணையின் நீா்மட்டம் தற்போது 41அடியாக நீடித்து வந்தது.

இதனால் அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிட பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனா்.

இதை ஏற்று குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து புன்செய் பாசனத்துக்கு மாா்ச் 20 முதல் மே 24 வரை 66 நாள்கள் இடைவெளி விட்டு தண்ணீா் திறக்க அரசு ஆணை பிறப்பித்தது.

இதனடிப்படையில் குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு வெள்ளிக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

நீா்வளத் துறை உதவிப் பொறியாளா் சக்திவேல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாசன விவசாய சங்கத் தலைவா் வி.என்.குப்புசாமி உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டு மதகில் இருந்து வெளியேறிய தண்ணீரில் மலா்தூவி வரவேற்றனா்.